இலக்க தகட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம்!! நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்
இலக்க தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தனியார் வாகனங்களுக்கு மட்டுமே
தொடர்ந்து கருத்துரைத்த அவர் "பொதுப் போக்குவரத்து, முச்சக்கர வண்டிகள், பிற போக்குவரத்துச் சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு ஏற்கனவே பல்வேறு முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன, தனிப்பட்ட பாவனைக்காகப் பயன்படுத்தப்படும் தனியார் வாகனங்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அனைத்து தனியார் வாகனங்களுக்கும் எரிபொருள் பெற வாரத்தில் 2 நாட்களை ஒதுக்க திட்டமிட்டுள்ளோம். உதாரணமாக, வாரத்தின் இரண்டு நாட்கள் இலக்க தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படும்" எனக் குறிப்பிட்டார்.
