யாழில் மேலுமொருவரை காவு வாங்கிய எரிபொருள் வரிசை..!
Fuel Price In Sri Lanka
Jaffna
Sri Lanka Fuel Crisis
Death
By Kiruththikan
யாழில் உந்துருளிக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக வரிசையில் சென்றவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பே உயிரிழப்புக் காரணம் என்று ஆரம்ப மருத்துவ பரிசோதனையி்ல் அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் கொக்குவிலில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
திடீரென மயங்கிச் சரிந்து உயிரிழப்பு

புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 40 வயதுடைய சொரூபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உந்துருளியை கொண்டு சென்று கியூஆர் குறியீட்டை காண்பித்த அவர், திடீரென மயங்கிச் சரிந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி