தேசிய எரிபொருள் அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!
தேசிய எரிபொருள் அனுமதி பத்திர கியூ.ஆர் முறைமை மீண்டும் புதிய பதிவுகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.
பராமரிப்புப் பணிகளுக்காக முடக்கப்பட்டது
புதிய பதிவுகள் 48 மணித்தியாலங்களுக்கு முடக்கப்படும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.
டுவிட்டரில் ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்ட ICTA, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு காரணமாக பதிவு செயல்முறை முடக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
எவ்வாறாயினும், தற்பொழுது திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய பதிவுகளுக்காக தேசிய எரிபொருள் அனுமதி பத்திர வலைதளம் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான(கியூ.ஆர்) புதிய பதிவுகளை மேற்கொள்ள >>> https://fuelpass.gov.lk/login
National Fuel Pass QR system is open for new registrations again!
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 8, 2022
The Department of Motor Vehicles has concluded their scheduled maintainable & the system is now available for new registrations again. https://t.co/P3vHConft8
