இந்திய முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு
இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக மாற்றமில்லாமல் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலைகள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளன.
மேற்காசியாவில் நிலவும் போர் சூழலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (15-ம் திகதி) வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது
பெட்ரோல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. அதாவது, ரூ.100.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போது ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது டீசல் விலை ரூ.95.50 ஆக உள்ளது.
ஒரே நாளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலை உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நாட்டு மக்களை கேட்டுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |