நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 293 ரூபாவாகும்.
361 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 341 ரூபாவாகும்.
டீசல் விலை
இதேவேளை 286 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 274 ரூபாவாகும்.
அத்துடன், 331 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.
மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 178 ரூபாவாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
