நாட்டில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) விலை திருத்தங்களுக்கு ஏற்ப, நேற்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்துவதாக லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை லீற்றருக்கு 10 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 299 ரூபாவாகக் குறைந்துள்ளது.
95 ஒக்டேன் பெட்ரோலின் விலையும் லீற்றருக்கு 10 ரூபா குறைக்கப்பட்டு புதியவிலை 361 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
எனினும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை இல்லை என்றும் லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.
இதேவேளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பெட்ரோலின் விலையைக் குறைத்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.
அதேபோல், ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 361 ரூபாவாகும்.
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
