மீண்டும் அதிகரித்தது எரிபொருள் விலை: முழுமையான விபரம் வெளியீடு
Fuel Price In Sri Lanka
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kiruththikan
எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்
நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
புதிய விலை விபரம்
92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், புதிய விலை 470 ரூபாவாகும்.
95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாவாகும்.
இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாவாக விலைகளில் இவ்வாறு திருத்தம் செய்யப்படவுள்ளன.
