எரிபொருட்களின் விலை சடுதியாக உயர்வு
sri lanka
price
fuel
increase
By Vanan
இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம், எரிபொருட்களுக்கான விலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 338 ரூபாவாகவும், 95 ஒக்டேன் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 373 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஓட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 289 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 329 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.
லங்கா IOC நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரித்திருந்த பின்னணியிலேயே, இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனமும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி