இன்று நள்ளிரவு எரிபொருள் விலைத்திருத்தம்...! மீண்டும் மக்களை ஏமாற்றுமா அரசு
மாதாந்த விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் திருத்தம் இன்று நள்ளிரவு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த எரிபொருள் விலை திருத்தத்தில் மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை என பல்வேறு தரப்பினரிடையே குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
குறிப்பாக வறுமை நிலையில் உள்ள மக்களிடத்தில் மண்ணெண்ணெய்யின் பயன்பாடு அதிகமாக காணப்படுவதால் விலை அதிகரிப்பானது அந்த மக்களுக்கு பாரிய சுமையாகவே அமைந்துள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
விலையை பாரியளவில் குறைக்க முடியும்
அநுர அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் எரிபொருள் விலையை பாரியளவில் குறைக்க முடியும் என்றும் ஆட்சிக்கு வந்தால் மிக குறைந்த விலையில் எரிபொருள் வழங்குவோம் என தெரிவித்திருந்தனர்.
எனினும் மக்கள் எதிர்பார்த்திருந்த விலைக்குறைப்பு இடம்பெற்றிருக்கவில்லை, இந்நிலையில் இன்றைய தினம் வெளியாக உள்ள விலைத்திருத்தம் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இறுதியாக கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பெட்ரோல் லீற்றரின் விலை
இதன்படி, டீசலின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.
311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூபாவில் மாற்றமடையாது அதன் விலை 313 ஆக உள்ளது. ஒக்டேன் 95 லீற்றர் பெட்ரோலின் விலை மாற்றமின்றி 371 ஆக உள்ளது.
இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 188 ரூபாவாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |