காணாமற்போன எரிபொருள் வரிசைகள்
Fuel Price In Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருள் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கு தட்டப்பாடு ஏற்படப்போவதாகத் தெரிவித்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் காணப்பட்ட வரிசைகள் முற்றிலும் மறைந்துவிட்டன.
எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் பெருமளவில் குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்ததையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை காணாமல் போயுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாளைய தினம் நாட்டில் எரிபொருள் விநியோகம் வழமைக்கு
சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் பெற்று சில வாகனங்கள் புறப்பட்டு சென்றன.
எவ்வாறாயினும், நாளைய தினம் நாட்டில் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி