மீண்டும் அதிகரிப்படவுள்ள எரிபொருள் ஒதுக்கீடு
வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மதிப்பீட்டிற்குப் பின் அடுத்த மாதம் முதல் இந்த ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளது.
எரிபொருள் திட்டம்

அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் திட்டம் தொடர்பில் இன்று இலங்கை கனிய வள கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
Fuel cargo plan & supply for the next 6 months was reviewed with CPC. Fuel import plans, refinery operations, refinery upgrade proposals, QR quotas, storage capacity, stock automaton, agreements with fuel stations, distribution as was reviewed & discussed. Fuel quotas will be… pic.twitter.com/7XYF9uMukv
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 20, 2023
இதன்போது, எரிபொருள் இறக்குமதி, கையிருப்பு, எரிபொருள் ஒதுக்கம், எரிபொருள் நிலையங்களுடனான ஒப்பந்தம் மற்றும் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.