எரிபொருள் நிலையங்களின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி -வருமானமும் சரிந்தது
எரிபொருள் விநியோகம் செய்பவர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மாதாந்திர வருமானம் 30% - 40% வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் எரிபொருள் இருப்பு ஓரிரு நாட்களில் தீர்ந்துவிடும் எனவும் தற்போது அதற்கு மூன்று நான்கு நாட்கள் ஆகும் எனவும் ஒன்றியத்தின் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார்.
வங்கி வட்டிக்கு அதிக பணம் செலுத்த வேண்டிய நிலை
இந்நிலைமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் வங்கி வட்டிக்கு அதிக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களை கூட நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை QR குறியீடு
எரிபொருள் விலை அதிகரிப்புடன் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள QR குறியீடு காரணமாக எரிபொருள் விற்பனை குறைந்துள்ளதாகவும், ஒரு காருக்கு 80 லீற்றர் பெற்றோல் பெறுவதற்கு 32000 ரூபா செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலைமையால் எதிர்காலத்தில் QR குறியீடு தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
