எரிபொருளுக்கான வரிசை - காரணத்தை தெரிவித்த அமைச்சர்!
Sri Lanka
Minister of Energy and Power
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Pakirathan
நாட்டில் பல பாகங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில், எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மக்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இது தொடர்பில் அமைச்சர் கஞ்சன மேற்குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
காரணம்
அத்தோடு எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
