சூரிய கிரகணத்தை காணத் தடை: எதிர்க்கும் சிறைக்கைதிகள்
திங்கட்கிழமை ஏற்படவுள்ள முழு சூரிய கிரகணம்(solar eclipse) தொடர்பில் நியூயார்க் சீர்திருத்த துறையின் முடிவை எதிர்த்து ஆறு சிறைக்கைதிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சூரிய கிரகணத்தின்போது சிறைச்சாலையின் அறைகளை அடைத்து வைக்கும் தீர்மானத்தை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மத நம்பிக்கை
அத்தோடு, குறித்த தீர்மானமானது, சிறைக்கைதிகளுக்கான மத நம்பிக்கையை பின்பற்றுவதற்கான அடிப்படை உரிமைகளை மறுக்கப்படுவது போன்று இருப்பதாக அவர்களின் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களின் வழக்கு மீளப்பெறப்பட்டதாகவும் அவர்களது கோரிக்கையும் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் சிறை துறையின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர நிலை
அதேவேளை, இந்த சூரிய கிரகணம் காரணமாக அமெரிக்காவின் நயாகராவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், அங்கு சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து ISO 12312-2 சான்றளிக்கப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |