இலங்கையை உலுக்கிய விபத்து: இறந்தவர்களின் இறுதிச் சடங்கு பொறுப்பை ஏற்ற மாநகர சபை!
எல்ல விபத்தில் இறந்த அனைவரின் இறுதிச் சடங்குகளும் தங்காலை மாநகர சபை மற்றும் தங்காலை தொழிற்சங்கத்தின் ஆதரவுடன் நடைபெறும் என்று தங்காலை மேயர் நந்தசிறி பரண பள்ளியகுருகே அறிவித்துள்ளார்.
பதுளை வைத்தியசாலையில் உடல்களின் பிரேத பரிசோதனைகள் இன்னும் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
அதன்படி, உடலம் இன்று இரவு (05) அந்தந்த வீடுகளில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினருடன் கலந்துரையாடல்
மேலும், இறுதிச் சடங்குகள் குறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அன்றைய தினம் அனைத்து உடல்களும் தங்காலை மாநகர சபைக்கு சுமார் 2 மணி நேரம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தினருடனும் பேசப்படும் என அவர் தொடர்ந்தும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
