இலங்கை, இந்தியாவை பாதிக்கவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
துருக்கி - சிரிய நில நடுக்கத்தினை தொடர்ந்து, பல நாடுகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டவண்ணம் உள்ளது.
இதேவேளை, அடுத்த வாரம் இந்தியாவில் 8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அந்தவகையில், இந்தியாவில் 8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதில் இலங்கையும் பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
அடுத்தவாரம் இந்தியாவின் ஹிம்ச்சல் – உத்தரகாண்ட் மாநிலங்களில் 8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட வாய்ப்பிருப்பதாக இந்தியா நிலநடுக்கவியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளநிலையில், இதன் தாக்கம் இலங்கையின் கொழும்பையும் பாதிக்கும் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஹிம்ச்சல் பகுதிக்கு அருகில் 5 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கொழும்பில் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
8 ரிச்டர் அளவில் இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படுமாயின் அது நூறில் இருந்து நூற்றி ஐம்பது ஆண்டுகள் பழமையான கட்டிடங்களை பெருமளவில் பாதிக்கும் என பேராசிரியர் அதுல சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
