ராஜபக்சாக்களின் அதிரடி - தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் பீரிஸ்
Prof G L Peiris
Sri Lanka Podujana Peramuna
Sagara Kariyawasam
By Sumithiran
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) செயற்குழு, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானம் எடுத்ததாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்து கொள்ள தவறிய பீரிஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸை அண்மையில் பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொள்ளுமாறு எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தவறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்தவாரம் புதிய தலைவர்

மேலும் கட்சியின் செயற்குழு அடுத்த வாரம் கூடி புதிய தலைவரை நியமிப்பது குறித்து முடிவெடுக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி