காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு கஜேந்திரகுமாருக்கு அழைப்பு..!
Jaffna
Gajendrakumar Ponnambalam
By Dharu
நாளைய தினம் மருதங்கேணி காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
"நான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிப்பேன் என தெரிவித்துள்ளேன்." என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும், "சபாநாயகரை தொடர்புகொள்ள முயன்றேன். தொடர்புகொள்ள முடியவில்லை. பிரதிசபாநாயகருக்கு இது குறித்து அறிவித்துள்ளேன்." என குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்