ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள செல்வராசா கஜேந்திரன்
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஜெனிவாவில் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக செல்வராசா கஜேந்திரன் நேற்று (23) ஜெனிவாவிற்கு புறப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (22) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு செல்வராசா கஜேந்திரன் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில்நேற்று முற்பகல்-10.30 மணியளவில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் ஊடாகக் கஜேந்திரன் புறப்பட்டுச் சென்றார்.
உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்காக
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது.
இக் கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரையான ஒருமாத காலத்துக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இலங்கை தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்காகவுமே இவர் ஜெனிவாவிற்கு பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)