அமெரிக்காவில் பயங்கரம்: இரவு விடுதிக்கு வெளியே துப்பாக்கிசூடு பலர் பலி
அமெரிக்காவில் சிகாகோ இரவு விடுதிக்கு வெளியே வாகனம் ஒன்றிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 23:00 மணியளவில் (04:00 GMT) ஒரு இருண்ட நிற கார் விடுதியை கடந்து சென்றதாகவும், வாகனத்திற்குள் இருந்த துப்பாக்கிதாரிகள் வெளியே இருந்த மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சிகாகோ காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
யாரும் கைது செய்யப்படவில்லை
வாகனம் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறையினர்கூறினர்.
துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு பகுதி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 24 மற்றும் 25 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் 26 மற்றும் 27 வயதுடைய இரண்டு பெண்கள் இறந்துவிட்டதாக காவல்துறையினர்தெரிவித்தனர்.
நான்கு பேர் ஆபத்தான நிலையில்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குறைந்தது நான்கு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
