தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கம்மன்பில விடுத்துள்ள எச்சரிக்கை
அரசாங்கத்துக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்களது பிரிவினை வாத நோக்கங்களை நிறைவேற்ற முயற்சித்தால் அதற்கு எதிர்ப்பை வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்டோர் அமரபுர நிக்காயவின் மாநாயக்க தேரர், தொடம்பஹல சந்ரசிறி தேரரை இன்று சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.
இந்த சந்திப்பின் பின்னர், கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள் மத்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு எந்த எதிர்ப்பும் வெளியிடப் போவதில்லை.
மாறாக தற்போதைய அரசாங்கத்துக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்களது பிரிவினை வாத நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சித்தால் அதற்கு எதிர்ப்பை வெளியிடுவதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றையதினம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்து
