அநுரவிற்கு மகஜர் கையளிக்கவுள்ள கம்மன்பில : வெளியான தகவல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் பொதுமக்களின் அதிருப்தியை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்காக குறித்த மகஜரில் கையொப்பமிடவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆய்வு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரவி செனவிரத்ன (Ravi Seneviratne) மற்றும் ஷானி அபேசேகர (Shani Abeysekara) ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்படாமல் முதல் மாதத்திலேயே அரசாங்கம் சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சனல் 4 வழங்கிய சர்ச்சைக்குரிய அறிக்கைக்கு தற்போதைய அரசாங்கத்தில் அதிகாரம் செலுத்தும் அதிகாரி ஒருவர் ஆதரவளித்துள்ளதாக உதய கம்மன்பில அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும், அந்த தேசத்துரோக அதிகாரிக்கு இந்த அரசாங்கத்தால் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கி தண்டிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |