கனமழை காரணமாக அங்கம்மனை பாலம் இடிந்து விழுந்தது
கடும் மழையுடன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கம்பளை - அங்கம்மன வீதியில் அமைந்திருந்த பாலம் முழுமையாக உடைந்து அங்கம்மன ஓயாவில் வீழ்ந்துள்ளது.
இரண்டு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வந்த இந்தப் பாலம், புதிதாக நிர்மாணிக்கப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளே ஆவதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அங்கம்மன ஓயாவில் ஏற்பட்ட கடும் நீரோட்டம் காரணமாகப் பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்கள் உடைந்து, பாலம் முழுமையாக ஓயாவில் சரிந்து விழுந்துள்ளது.
அதிகாரிகளிடம் கோரிக்கை
இதனால் ஓயாவின் நீரோட்டமும் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொப்பேவல, அங்கம்மன, பீபீ ஜனபதய மற்றும் டார்ட்டி ஜனபதய ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் இந்தப் பாலத்தையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
எனவே, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பாலத்தை விரைவாகப் புனரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |