கணேமுல்ல சஞ்சீவ கொலை: செவ்வந்தியின் மேலும் பல புகைப்படங்கள் வெளியாகின!
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற பிரதான சந்தேகநபருக்கு உதவி புரிந்த குற்றத்திற்கு தேடப்படும் சந்தேக நபரான பெண்ணின் மேலும் பல புகைப்படங்களை காவல்துறையினர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
புதுக்கடை நீதிமன்றத்தினுள் பெப்ரவரி 19 ஆம் தேதி கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன என்ற ஒரு திட்டமிட்ட கும்பலின் குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரி, காவல்துறை இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
XOS3FQY
விசாரணை
25 வயதுடைய பின்புர தேவகே இஷாரா சேவ்வந்தி என்ற சந்தேகநபர், தேசிய அடையாள அட்டை எண் 995892480V, 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகமவில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கொழும்பு குற்றப்பிரிவு தற்போது சர்ச்சைக்குரிய கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், மேற்கண்ட சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவு (CCD) இயக்குநர் - 071-8591727
CCD பொறுப்பதிகாரி - 071-8591735
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்