கணேமுல்ல சஞ்சீவ கொலை : நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய அறிக்கை
புதுக்கடை நீதிமன்றத்தில் இடம்பெற்ற கணேமுல்ல சஞ்சீவவின் (Ganemulla Sanjeewa) கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் (Thanuja Lakmali) உத்தியோகபூர்வ அறையில் தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கைக்கு அமைவாக, நீதிமன்றம் காவல்துறையினருக்கு பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொலைச் சம்பவம்
அதனடிப்படையில், பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளன.
கடந்த 19 ஆம் திகதி காலை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொழும்பு குற்றப்பிரிவு தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
