கணேமுல்ல சஞ்சீவ படுகொலை பின்னணியில் இருந்த பெண்ணின் தகவல்கள் வெளியாகின...!
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Dilakshan
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவ வந்த பெண்ணின் புகைப்படங்கள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, அவர் பின்புர தேவகே இஷாரா சேவ்வந்தி என்ற பெண் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாதாள உலக கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த நபருடன் மற்றொரு பெண்ணும் வந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
விசாரணை
இந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபரான பெண் வழக்கறிஞர் போல் உடையணிந்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, குறித்த பெண் துப்பாக்கியை சந்தேக நபரிடம் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்