நால்வரடங்கிய குழுவால் வாள்வெட்டு - ஒருவர் படுகாயம்..! யாழில் சம்பவம்
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Kiruththikan
வாள்வெட்டு
இளவாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நால்வரடங்கிய குழுவால் நடத்தப்பட்ட குறித்த வாள்வெட்டுத் தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
சிவானந்தன் ஜெயக்குமார் (வயது 42) என்ற நபரே காயமடைந்தவராவார்.
ஆளுநரைச் சந்தித்து முறைப்பாடு வழங்கிய நபர்
ஆலயமொன்றில் இடம்பெற்றுவரும் நிர்வாக மோசடிகள் தொடர்பில் அண்மையில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து முறைப்பாடு வழங்கிய நபர் மீதே இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இளவாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி