யாழில் பூட் சிற்றிகளில் திருடும் கும்பல் : காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Sathangani
யாழ்ப்பாணம் (Jaffna) நகர் பகுதிகளை அண்மித்துள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருட்டுக்களில் ஈடுபடும் குழுக்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அறியத் தருமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்பொருள் விற்பனை நிலைய உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
பொருட்களை திருடுதல்
பல்பொருள் விற்பனை நிலையங்களுக்கு மூவர் அடங்கிய குழுவாக சென்று, அங்கு பொருட்களை வாங்குவது போல பல பொருட்களை திருடி, தமது ஆடைகளுக்குள் மறைத்து எடுத்து செல்வது அங்குள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
இக் குழு தொடர்ச்சியாக இவ்வாறான திருட்டுக்களில் ஈடுபட்டு வருவதனால், அவர்கள் தொடர்பான தகவல்கள் அறிந்தால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.
மேலதிக தகவல்கள் - பிரதீபன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 20 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
4 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி