பெண் உட்பட இருவர் மீது வாள்வெட்டு - மன்னாரில் சம்பவம்
மன்னார் இலுப்பக்கடவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மூன்றாம்பிட்டி பகுதியில் இளைஞர் ஒருவரும் பெண்ணொருவரும் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் நேற்று (09) காலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
பின், காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
பாலியாறு பகுதியைச் சேர்ந்த 50 வயதான பெண்ணும், 27 வயதான ஆணுமே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் பாலியாறு பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.