என்ன.. மறுபடியும் கஞ்சா கடத்த தொடங்கிட்டாங்களா?
ஏனோ தெரியேல்ல அந்த இயக்கத்தப் பற்றி.. மன்னிக்கவும் அந்த ஆயுதக் குழுவைப்பற்றி.. sorry.. அந்த தமிழ்க்கட்சியைப் பற்றி எழுத வெளிக்கிட்டா மண்டைக்குள்ள கஞ்சா ஞாபகம் வருகிறத தடுக்கமுடியேல்ல.
சில வருடங்களுக்கு முன்னர் அயல்நாடொன்றில் இருந்து பெருமளவு கஞ்சா கடத்திக்கொண்டு மன்னார் வழியாக வந்து இலங்கையில் வினியோகிப்பதை ஒரு தொழிலாக மேற்கொண்ட பலர் அந்த நாலெழுத்து கட்சியில இருந்ததாக மக்கள் மத்தியில பேச்சடிபட்டது.
சிலர் கையும் களவுமாக பிடிபட்டதாகவும் நியூஸ் வந்தது.
தமிழீழ விடுதலைக்கென்று போராடக் கிளம்பிய அந்த இயக்கம் 87இல ஆயுதக் குழுவாக மாறி ஈழம் கேட்ட பெடியலையெல்லாம் சுட்டுத்திரிந்து, கொலை பாலியல்வல்லுறவு எண்டு கனக்க விளையாட்டெல்லாம் காட்டிவிட்டு, 2003ம் ஆண்டு திடீரெண்டு ஞானோதயம் பெற்று கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி மறுபடியும் நுணி நாக்கில தமிழ் தேசியம் பேசிக்கொண்டு திரிஞ்சினம்.
இப்ப 'அமைச்சுப் பதவி', 'அபிவிருத்தி' எண்டு டக்ளஸ், அங்கஜன், பாணியில கதைவிட ஆரம்பிச்சிருக்கினம்.
ஆனா பெடியளின்ட கையில நல்லா காசு புளங்கிது.
வேட்பாளர்களையெல்லாம் கட்டுக் கட்டா காசு குடுத்து வாங்குகின்றார்களாம். தமிழ் நாட்டுப் பாணியில வாக்குக்கு 5000 முதல் 1000 வரை குடுக்கவும் ப்ளான் பன்னுறாங்களாம்.
அந்தக் கட்சியில எம்.பி. பதவியைத் தவிர வேற யாருமே வேல கீல செய்யுறமாதியும் தெரியல்ல.
முதல்லயாவது காட்டிக்கொடுத்து அரசாங்கத்திட்ட இராணுவப் புலனாய்வுச் சம்பளம் வாங்கிக்கொண்டு திரிந்தவங்க. 2003க்குப் பிறகு அதுவும் இல்ல.
அப்பிடியெண்டா எங்கிருந்து பெடியளுக்கு காசு கிடைக்கிது?
வடக்கு கிழக்கில கஞ்சா.. ஐஸ் என்று போதைப்பொருள் வியாபாரம் களைகட்டியிருக்கென்று பேப்பரில செய்தி செய்தியா வந்துகொண்டிருக்கு.
ஏண்டா தம்பிமாரே மறுபடியும் மன்னார் வழியா ஏதாவது கடத்தத்தொடங்கிட்டீங்களா டா?
'ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் இப்ப அவங்க செய்யமாட்டாங்க. பிள்ளைகள் தமிழ் தேசியம் பேசத் தொடங்கிட்டாங்க எல்லோ. அதனால இப்ப அவங்க அப்பிடிச் செய்யமாட்டாங்க' எண்டுதான் உள் மனம் சொல்லும்.
'70களில முதல் முதல்ல தமிழ் தேசியம் பேசி தமிழ் விடுதலைக்காக ஆயுதம் தூக்கின இவங்க 20 வருசத்தில கஞ்சா கடத்தினது உண்மையெண்டால், 2002 இல் திரும்பவும் தமிழ் தேசியம் பேச ஆரம்பிச்ச அதேயாட்கள் மற்றொரு 20வருசம் கழித்து கஞ்சா கடத்தமாட்டாங்க எண்டு என்ன நிச்சயம்' என்று உங்கள் 'மைன்ட் வொயிஸ்' கூறினா, அதுக்கு 'கொம்பனி' பொறுப்பல்ல..