நியூஸிலாந்திலும் எரிபொருளுக்கு வரிசையாம் - ஆளும் தரப்பு எம்.பி கண்டுபிடிப்பு
new-zealand
queues
gas-and-petrol
By Sumithiran
இலங்கை மட்டுமன்றி நியூசிலாந்திலும் இன்று எரிவாயு வரிசைகளும் பெற்றோல் வரிசைகளும் காணப்படுகின்றன என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன தெஹிப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் எரிபொருளின் விலை தொடர்ச்சியாக 3 முறை உயர்த்தப்பட்டு அரைவாசி எரிபொருளே வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
கொரோனா தொற்றுநோய் குறையும் வேளையில் உக்ரைனிய-ரஷ்ய போர் தொடங்கியுள்ளது, எனவே நிலைமை அமைதியாகும் வரை பொறுமையாக இருங்கள் என்று அவர் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி