எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எரிவாயு கொள்வனவு கேள்விப்பத்திரம் கோரலில் அரசாங்கம் மோசடியில் ஈடுபட்டுள்ளதால் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
எரிவாயு கொள்வனவு கேள்விப்பத்திரம் கோரலில் அரசாங்கம் மோசடியில் ஈடுபட்டுள்ளதால் இந்தநிலை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நாட்டுக்கு ஒரு வருடத்துக்கு 300-350 டொலர் மில்லியன் எரிவாயு கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது.
அதற்காக அரசாங்கம் எரிவாயு கொள்வனவுக்காக புதிய கேள்விப் பத்திரங்களை கோரியுள்ளது.
புதிய கொள்வனவு
18 பேர் புதிய கேள்விப்பத்திர விண்ணப்பங்களை எடுத்துள்ள நிலையில், புதிய எரிவாயு கொள்வனவு கேள்வி பத்திர நெறிமுறைகளின் படி கொள்வனவுக்கான வைப்புத் தொகை ஒரு மில்லியன் டொலராக காணப்பட்டது.
இருப்பினும், புதிய கொள்வனவு வைப்புத் தொகையாக 2.7 டொலர் மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு செயற்பாட்டுக்கான வைப்புத் தொகை மூன்று மில்லியன் டொலரில் இருந்து 27.5 மில்லியன் டொலராக விசாளமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
போட்டித் தன்மை
இவ்வாறான செயற்பாடுகளால் கேள்விப்பத்திர போட்டித் தன்மை வலுவிழக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பட்ட சில நிறுவனங்கள் அதுவும் குறித்த நிபந்தனைக்கு இணக்கம் தெரிவிப்பவையே கேள்விபத்திரங்களை சமர்ப்பிக்க முடியும்.
அதனால் போட்டித் தன்மை காணப்படுவது அரிதாகவே இருக்கும் ஆனால் பழைய செயற்பாட்டு வைப்புத் தொகையில் 18 பேரும் விண்ணப்பிக்கலாம், அப்போது போட்டித் தன்மை அதிகரிக்கும்.
இதனால் பாரிய சிக்கல் ஏற்படலாம், இந்த சிக்கல் மறுபக்கமாக எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் அத்தோடு, இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்துக்கு தேவையானவர்களுக்கு கேள்வி பத்திரங்களை வழங்கும் செயற்பாட்டுக்கு இட்டுச் செல்வதுடன் இது அரசாங்கத்தின் தெளிவற்ற செயற்பாடுகளாக காணப்படுகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
