எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்க வாய்ப்பு..!
Sri Lanka
Litro Gas Price
By Dharu
சர்வதேச சந்தையின் தற்போதைய விலையுடன் ஒப்பிடும் போது 12.5 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை பெப்ரவரி மாதத்திற்குள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இறுதியாக இந்த ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி எரிவாயு விலை குறைந்தது.
5,300 ரூபாயாக

அதன்பிறகு 200-300 ரூபா வரை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
அதற்கமைய தற்போது சந்தையில் 12.5 கிலோ லீற்றர் எரிவாயு சிலிண்டர் 4409 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
உள்ளக தகவல்களின் அடிப்படையில் பெப்ரவரி மாதத்திற்குள் ஒரு எல்பிஜி சிலிண்டர் விலை (12.5 கிலோ) 5,300 ரூபாயாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி