சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் கோரிக்கை..!
Government Of Sri Lanka
Litro Gas Price
Sri lanka Food Recipes
Laugfs Gas Price
By Sumithiran
சமையல் எரிவாயு விலை குறைப்பிற்கு இணையாக உணவுப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கான, முறைமை ஒன்றை முன்வைக்குமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.
அகில இலங்கை சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“உணவுப் பொருட்களின் விலை குறைப்பு விவகாரத்தில் அரசாங்கம் புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.
தேநீரின் விலை 30 ரூபா
மேலும், நுகர்வோர் விவகார அதிகார சபை உரிய முறைமைகளைக் கொண்டுவர வேண்டும்.
தேநீரின் விலை, 30 ரூபா என அறிவித்து, வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும்.
அவ்வாறு செய்தால், இலங்கையில் உள்ள சிற்றுணவகங்களில், தேநீரின் விலையை 30 ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்." என தெரிவித்தார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்