நாட்டில் தொடரும் எரிவாயு தட்டுப்பாட்டு - இலங்கையை வந்தடைந்த கப்பல்
3000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை ஏற்றிய ‘கேஸ் குட்வில்’ எனும் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது
வீட்டு மற்றும் வர்த்தகப் பாவனையாளர்களுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைப் படிப்படியாக மீள ஆரம்பிக்கவுள்ளதாக லாப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் சில்லறை விற்பனை நிலையங்களுக்குச் செல்வதற்கு முன்பு, தங்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட LAUGFS எரிவாயு விற்பனையாளரைத் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது 1345 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ தங்கள் பகுதியில் எரிவாயு சிலிண்டர் இருப்பு குறித்து விசாரித்துக் கொள்ளலாம் என்றும் LAUGFS குறிப்பிட்டுள்ளது.
விநியோகத் தடை
அதிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் நிறைவடைந்ததும் சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளது.

விநியோகத் தடையால் பாதிக்கப்பட்ட வீட்டு மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், பல கட்டங்களாக விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், விற்பனை நிலையங்களுக்குச் செல்வதற்கு முன்னர் தமது பிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |