போரின் போக்கை மாற்றப்போகும் அதிரடி தாக்குதல்!
காசாவின் வைத்தியசாலை மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தற்போது போரின் போக்கையே மாற்றிவிடப்போவதாக எண்ணத் தோன்றுகிறது.
காசாவின் வைத்தியசாலை மீது நேற்றைய தினம் நடத்தப்பட்ட தாக்குதல் ஹமாஸ் அமைப்பினாலேயே மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று இஸ்ரேல் கூறி நிரூபிக்க முயன்றாலும் அது இஸ்ரேல் விமான குண்டுத்தாக்குதல் என்றே மேற்குலக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட ராக்கெட் தாக்குதல் தவறுதலாக வைத்திய சாலையில் விழுந்து வெடித்து விட்டதாக கூறும் இஸ்ரேல் அதற்கான ஆதாரம் என்று சில காணொளிகளை வெளியிட்டிருந்தது.
ஆனால் அதிபயங்கர சேதத்தை ஏற்படுத்த கூடிய ஏவுகணைகள் ஹமாஸிடம் இல்லையென கூறும் ஆய்வாளர்கள் இது இஸ்ரேலின் தாக்குதலாகவே இருக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக ஜோ பைடன் வருகையன்று நடந்த இந்த தாக்குதல், பைடன் மத்தியகிழக்கை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டிருந்த இராஜதந்திர நகர்வுகளையும் தவிடுபொடியாக்கியுள்ளது.
இஸ்ரேலுக்கு இப்போது இருக்கும் ஒரே வழி போர் மாத்திரம் தான். எனவே அந்த யுத்தத்தின் வியூகம் மத்திய கிழக்கில் எப்படியிருக்க போகிறது என்பதை தான் இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சியில் பார்க்க இருக்கிறோம்.