இஸ்ரேலின் எல்லைகளை மட்டுமல்ல.. மத்தியகிழக்கையும் கடந்து செல்லும் காசா யுத்தம் (காணொளி)
காசாவில் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கின்ற யுத்தம் மேலும் விரிவடைய போகிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாகி வருகின்றது.
யுத்தம் இஸ்ரேலிய எல்லைகளை கடந்தும் விரிவடைய போகின்றது என்பதை இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏற்கனவே அறிவித்துள்ளன.
கடந்த வாரம் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தலங்கள் மீது ஈரானின் துணை இராணுவங்கள் மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 56 அமெரிக்க வீரர்கள் காயம் அடைந்ததை தொடர்ந்து கிழக்கு சிரியாவில் உள்ள ஈரானின் ஆதரவு அமைப்புக்களின் முகாம்கள் மீது அமெரிக்காவின் வான் படை நேற்றயதினம்(14) கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தலங்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் தமது தலங்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு அமெரிக்கா தமது படை நடவடிக்கைகளை மேலும் விரிவுப்படுத்தும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதேபோன்று, லெபனான் எல்லையில் இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளில் ஹிஸ்புல்லாக்களும் பலஸ்தீன போராட்ட அமைப்புக்களும் மோட்டார் மற்றும் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு தாக்குதல்களை மேற்கொண்டு வருவதும் இஸ்ரேல் லெபனானில் உள்ள எதிரிகளின் நிலைகள் மீது பதில் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
இஸ்ரேல் தனது எல்லைகளை கடந்துச் சென்று லெபனானிலும் சிரியாவில் உள்ள ஈரான் துணை இராணுவ குழுக்களின் நிலைகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதானது யுத்தம் காசாவுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு நின்று விடப்போவதில்லை என்பதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் எல்லைகளை கடந்துச் செல்லும் இந்தப் போர் தொடர்பான உண்மைகளை தெளிவான முறையில் எடுத்துக் கூறுகிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி...