உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
G.C.E.(A/L) Examination
By Vanan
க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் தாம் ஈடுபடத் தயார் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் மதிப்பீடு
இதன்படி, இன்று முதல் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளன உறுப்பினர்கள் மேற்படி பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டைப் புறக்கணித்திருந்தனர்.
அத்தோடு, தங்கள் எதிர்ப்பின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி