உயர்தர பரீட்சை தொடர்பாக பரீட்சை ஆணையாளர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!
உயர்தர பரீட்சையை ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே.எம். திரு அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி, 17ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் பரீட்சை முழுமையாக முடியும் வரை பரீட்சார்த்திகளுக்கான பயிற்றுவிப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அந்த வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என குறித்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. .
மேலும், பாடத்தில் விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்துதல், மேற்படி தேர்வுகளுக்கான வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சடித்து விநியோகித்தல், தேர்வுத் தாள்களில் உள்ள கேள்விகளை விளம்பரப்படுத்துதல் அல்லது சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள், மின்னணு, அச்சு ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்தல் போன்ற செயல்களைச் செய்வது அல்லது வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு
எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ அல்லது வேறு தரப்பினரோ இந்த உத்தரவுகளை மதிக்காமல் செயற்பட்டால், அந்த நபரோ அல்லது நிறுவனமோ அல்லது அந்த தரப்பினரோ குற்றவாளிகள் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபரோ அல்லது அமைப்போ அல்லது தரப்பினரோ இந்த உத்தரவுகளை மீறினால் அருகிலுள்ள காவல்நிலையம் அல்லது காவல்துறை தலைமையகம் அல்லது இலங்கைப் பரீட்சை திணைக்களத்திற்கு பின்வரும் இலக்கங்களில் முறைப்பாடு செய்யுமாறும் அமித் ஜயசுந்தர கேட்டுக் கொண்டார்.
காவல்துறை தலைமையகம் - 011 242 1111
காவல்துறை அவசர எண் - 119
இலங்கை பரீட்சை திணைக்கள அவசர தொலைபேசி இலக்கம் - 1911
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் - 0112 785 211 / 0112 785 212
பள்ளி தேர்வு அமைப்பு மற்றும் முடிவுகள் கிளை - 0112 784 208 / 0112 784 537
