சூடுப்பிடிக்கும் பொதுத் தேர்தல்: தேசிய மக்கள் சக்திக்கு அதிகரித்துள்ள பதற்றம்
ஜனாதிபதி தேர்தலில் கிடைத்ததை போன்ற ஆதரவு எதிர்வரும் பொதுத் தேர்தலில் கிடைக்காது என்ற பதற்றம், தேசிய மக்கள் சக்தியிடம் அதிகரித்துள்ளது.
மக்களுக்கு மீண்டும் மீண்டும் பொய்களை கூறி மக்களை தவறாக வழிநடத்த முயலும், நகர்வுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் ரில்வின் சில்வா தமிழ் மக்கள் மத்தியிலும், தமது தரப்பு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது குறித்து விசனம் தெரிவிக்கின்றார்.
திரிபு படுத்தப்பட்ட காணொளிளை பயன்படுத்தி வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தி மீது பொய் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுவதால் இவ்வாறான சதிகளை தோற்கடித்து தேசிய ஒருமைப்பாட்டையும், நாட்டையும் கட்டியெழுப்பக்கூடிய வெற்றியை தமிழ் மக்களும் இணைந்து தங்களுக்கு வழங்க வேண்டுமென கோரிக்கையொன்றையும் முன்வைக்கின்றார்.
இலங்கையின் மிகப்பெரிய மாக்கஸிச கட்சியான ஜேவிபியின் (JVP) மறுபக்கம் இலங்கையின் பேரினவாத கட்சிகளில் ஒன்று என்ற யதார்த்ததுடன் பிணைந்திருக்கும் விடயத்தை யாரும் முற்றாக மறுக்க முடியாது.
ரில்வின் செல்வா (Tilvin Silva) குற்றம் சாட்டுவது போல ரணில் (Ranil Wickremesinghe) மட்டுதல்ல இலங்கை மக்களை தவறாக வழிநடத்திய பொறுப்பு ஜேவிபியினர் மீதும் உண்டு.
இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆராய்கின்றது இன்றைய செய்தி வீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |