மீண்டுமொரு வரலாற்று தவறை இழைக்கப்போகிறார்களா தமிழ் மக்கள்..!
அவர் ஒரு பிரபல சட்டத்தரணி . அவர் கட்சிக்குள் வந்தபின்பே பிரச்சனைகள் பூதாகரமாக தலைதூக்கின. அந்த கட்சியில் கூட்டமைப்பாக இருந்தவர்களை எல்லாம் அவர் உதைத்து தள்ளினார். இன்று அவர் வந்த கட்சியையும் சின்னாபின்னமாக்கினார்.
ஆனால் தான்தான் ஏதோ கட்சியை வழி நடத்தினமாதிரியும் தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற மாதிரியும் கதை வேறு.
அத்துடன் தனக்கு சார்பான வால்பிடிகள் கொஞ்சப்பேரை வைத்துக் கொண்டு பேயாட்டம் ஆடுகிறார் அவர்.
தமிழ் தேசியத்திற்காக நிற்பவர்களை எல்லாம் இவருக்கு கண்ணில் காட்டக்கூடாது.அப்படி அவர்கள் தமிழ் தேசியம் பற்றி கதைத்தால் இவருக்கு அப்படியே கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும்.
இனப்பிரச்சினை தீர்வுக்கென அமெரிக்கா போவார். இந்தா அடுத்த வருடம் தீர்வு என்பார். அத்துடன் மற்றுமொரு நாடகத்தை கொஞ்ச நாள் ஆடினார். அதாவது இனப்பிரச்சினை தீர்வில் தமிழில் ஒரு வார்த்தை சிங்களத்தில் ஒரு வார்த்தை என கூறி திரிந்தார்.
அதனைவிட கொழும்பு அரசியலில் யார் வந்தாலும் கட்சியை கேட்காமல் இரகசிய சந்திப்பை நடத்துவார். பின்பு அது தெரியவந்தால் அது சினேகித பூர்வ சந்திப்பு என்பார் அல்லது தமிழருக்கான தீர்வுக்கான சந்திப்பு என்பார்.
இப்பொழுது வந்துள்ள முன்னாள் போராட்டக்குழு தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமரையும் ஓடோடிச் சென்று சந்தித்து விட்டே வந்துள்ளார்.
பத்து வருடமாக நாடாளுமன்றில் இருந்ததே ஒழிய இவரால் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் இல்லை. கேட்டால் தமிழ் என் மூச்சு தமிழருக்கு என் உயிர் என்பார்.
இவர் தான் தமிழ் மக்களுக்கு விமோசனம் பெற்றுத் தரப்போகிறார். இவரை நம்பி மீண்டும் தமிழ் மக்கள் வரலாற்று தவறை இழைக்கப்போகிறார்களா? அவர் யாரனெ்று புரிகிறதா உங்களுக்கு....அவர்தான்...