ஜெனிவா மனித உரிமைகள் விவகாரம் -படை அதிகாரிகள் முக்கிய கலந்துரையாடல்

army geneva-2019 hrc geneva meeting
By Vasanth Feb 10, 2021 10:53 AM GMT
Report

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய பாதுகாப்பு கற்கைகள் தொடர்பிலான 'திங்க் ராங்க்' தேசிய கற்கைகள் நிறுவனத்தினால் எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் தொடர்பிலான இரவு நேர கலந்துரையாடல் திங்கட்கிழமை (08) ரங்கல்ல கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரும் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமுமான அட்மிரல் (பேராசிரியர்) ஜெயநாத் கொலம்பகே வரவேற்புரை நிகழ்த்திய பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமால் குணரத்னவால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

அதனையடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வரைவுகள் தொடர்பில் இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அட்மிரல் (பேராசிரியர்) ஜெயநாத் கொலம்பகே, சர்வதேச நீதி கட்டமைப்புகள் தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முன்னாள் ஆலோசகர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பேராசிரியர் ரொஹான் பெரேரா, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் தாக்கங்கள் இந்த தீர்மானங்களிலிருந்து விலகுவதன் விளைவுகள் மற்றும் இலங்கையின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விரிவுரையினை பாத் பைண்டர் அறக்கட்டளையின் தவிசாளரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளருமான பேர்ணாட் குணதிலக, இலங்கைக்கு பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகள்' தொடர்பிலான விரிவுரை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் வட.மாகாண ஆளுநருமான எச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்காரவாலும் நிகழ்த்தப்பட்டது.

அதனையடுத்து இந்த அமர்வுகளில் பங்கேற்று பயன் பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் தகவல் தொடர்பு மற்றும் வெளியீடுகள் பணிப்பாளர் ரியர் அட்மிரல் திமுத்து குணவர்தன நன்றி உரையினை நிகழ்த்தினார்.

அதேநேரம் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம் (ஐ.என்.எஸ்.எஸ்) என்பது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இலங்கையின் முதன்மையான தேசிய பாதுகாப்பு சிந்தனைக் குழுவாகும் என்பதுடன், இது பாதுகாப்புச் சூழலைப் புரிந்துகொள்வதற்கும், சான்றுகள் அடிப்படையிலான கொள்கை மற்றும் விவாதங்கள், விவாதங்களுக்கான உத்திகளை உருவாக்குவதற்கும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதற்கும் நிறுவப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி