அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிசூடு - ஒருவர் ஸ்தலத்தில் பலி
death
u s
georgia-shooting
By Jaso
அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் உள்ள போர்ட் வேலி அரச பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதி அருகே சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதுடன் ஏழு பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர் மாணவர் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஏழு பேரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமானவர்களை அடையாளம் காண புலனாய்வாளர்கள் உதவி கோருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போர்ட்வேலி பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.