திருமணம் செய்யாவிடில் வேலை பறிபோகும் : சீன நிறுவனம் அதிரடி அறிவிப்பு
சீனாவில்(china) உள்ள ஒரு நிறுவனம், தனது ஊழியர்களை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது.
அதாவது, இந்த மார்ச் மாத இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் வேலையைவிட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று எச்சரிக்கை பாணியில் கடிதம் சென்றுள்ளது.
திருமணம் செய்ய காலக்கெடு
மேலும், மார்ச் மாதத்துக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் தங்களைப் பற்றி சுய விமர்சனக் கடிதம் ஒன்றையும் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து கடும் ஆட்சேபனை எழுந்ததால், இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருமணத்தை தள்ளிப்போடும் இளைஞர்கள்
சீனாவில் கடுமையான விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு காரணிகளால், இளைஞர்கள் திருமணம் செய்துகொள்வதை தள்ளிப்போடுகிறார்கள் அல்லது தவிர்த்து வருகிறார்கள்.
இதனால், திருமண உறவுகள் மற்றும் மக்கள் தொகை விகிதமும் கடுமையாக சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான், சில நிறுவனங்கள், திருமணம் ஆகாமல் இருக்கும் தனது ஊழியர்களை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 23 மணி நேரம் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்