இலங்கைக்கு இந்தியா அளித்த அன்பளிப்பு - கொழும்பு துறைமுகம் விரைந்த இந்திய கடற்படை கப்பல்(photos)
Port of Colombo
Government Of India
By Sumithiran
இந்திய கடற்படைக் கப்பல் 'INS GHARIAL' இன்று (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
'INS GHARIAL' என்ற கப்பல் 760 கிலோகிராம் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளது.
இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை கையளிப்பதற்காக 'INS Gharial' இன்று கொழும்பு வந்தடைந்தது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமணவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்த மந்துகள் மற்றும் பொருட்கள் இலங்கைக்கு இந்தியா வழங்கிய பரிசாகும்.




4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்