காவல்துறையினரை திண்டாட வைத்த நைஜீரியர்: எட்டு ஆண்டுகளின் பின் கைது!
சுமார் எட்டு ஆண்டுகளாக காவல்துறையினரிடம் பிடிபடமால் ஒளிந்து திரிந்த நைஜீரியரான கிறிஸ்டோபர் இகெக்வா என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது இலங்கை பிரஜைகளிடம் இருந்து தொகுதியாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொழும்பில் ஒரு பெண் சுமார் ரூ. 1.5 மில்லியன் பணத்தை இழந்ததாக முறைப்பாடளித்துள்ளார். சந்தேகநபர், "உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பரிசுப்பெட்டி வந்துள்ளது" என்று கூறி,சுங்கக் கட்டணம், பதிவு கட்டணம், அரசு வரி, கையிருப்பு கட்டணம் என பல பெயர்களில் பணம் வாங்கியுள்ளார்.
கைதாகவுள்ள நைஜீரியர்கள்
இது குறித்து சைபர் குற்றத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கையில், இதேபோன்ற பல வழக்குகள் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நடைப்பெற்று வருகின்றன.
இதே மோசடியில் தொடர்புடைய பல நைஜீரியர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர் எனவும் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவு
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மலி ஜயதுங்க முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
அதன்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், விசாரணைகள் தொடரவுள்ளதால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க கோரிக்கை விடுத்தது.
கோரிக்கயின் படி, நீதிமன்றம், அவரை ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
