தவறான முடிவெடுத்து 13 வயது சிறுமி உயிரிழப்பு..!
Death Penalty
Death
By Kiruththikan
தலவாக்கலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ட்ருப் (Troup) தோட்டத்தில் இன்று மாலை 4 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தரம் 8 இல் கல்வி கற்ற 13 வயது சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தற்கொலையா அல்லது விபத்தா, கொலையா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மரணம் தொடர்பான விசாரனைக்கு மாவட்ட நீதவான் வரும் வரை சடலம் சிறுமியின் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரனை
சம்பவம் நடைபெற்ற போது வீட்டில் ஒருவரும் இருக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
சிறுமியின் பெற்றோர் கொழும்பில் வேலைக்காக சென்றுள்ளதாகவும் தனது தாத்தா பாட்டியின் பாதுகாப்பிலேயே சிறுமியும் அவளது சகோதரனும் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி