அதிகாலைவேளை சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்ற சிறுமிகள்
சிறுவர் பராமரிப்பு சீர்திருத்த நிலையம் ஒன்றில் இருந்து 14,13 வயதுடைய இரண்டு சிறுமிகள் இன்று (திங்கட்கிழமை) தப்பி ஓடியுள்ளனர்.
மட்டக்களப்பு கொக்குவில் காவல்துறை பிரிவிலுள்ள சிறுவர் பராமரிப்பு சீர்திருத்த நிலையம் ஒன்றிலிருந்தே இந்த சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் ஏறாவூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியுமே தப்பி ஓடியுள்ளார்கள்.
காவல்துறையினர் விசாரணை
இன்று அதிகாலை 2.30 மணியளவில் இவர்கள் தப்பி ஓடியுள்ளதாக பாராமரிப்பு நிலையத்தினர் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் சிறுவர் திருமணம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்கள் குறித்த பராமரிப்பு நிலையங்களுக்கு நீதிமன்றத்தினால் அனுப்பப்படுகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
