புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது பாரிய போராட்டம்
பிரிட்டனில்(uk) புலம்பெயர்வுக்கு எதிராக ஒன்றரை லட்சம் பேர் சேர்ந்து மாபெரும் பேரணியை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சனிக்கிழமை(13) இந்த மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ரொபின்சன் (42) தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சுமார் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
காவல்துறையினர் மீதும் தாக்குதல்
இந்தப் பேரணியில் ஈடுபட்ட சிலர், காவல்துறையினர் மீதும் தாக்குதலை நடத்தினர். கூட்டத்துக்குள் இருந்து காவல்துறையினர் மீது போத்தல்களை வீசியதில், 26 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அமைதியைச் சீர்குலைத்தல், வன்முறை, தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
எலோன் மஸ்க் கொட்டிய வன்மம்
புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இந்தப் பேரணியைக் குறிப்பிட்டுப் பேசிய டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான பிரிட்டன் அரசைக் கலைக்க வேண்டும் என்று கூறினார்.
போராட்டக்காரர்களுடன் காணொளி அழைப்பில் பேசிய எலோன் மஸ்க், ``நீங்கள் வன்முறையைத் தேர்ந்தெடுத்தாலும் இல்லாவிட்டாலும், வன்முறை உங்களைத் தேடி வருகிறது.
கட்டுப்பாடற்ற புலம்பெயர்வு பிரிட்டனை அழித்து விடும்
நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டும் அல்லது நீங்கள் இறந்துவிட வேண்டும். அதுதான் உண்மை என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும், கட்டுப்பாடற்ற புலம்பெயர்வு பிரிட்டனை அழித்து விடும் என்றும் அவர் எச்சரித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
