பதவி விலகும் கீதா கோபிநாத்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கீதா கோபிநாத் பதவி விலகல் செய்யவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா நேற்று (21) இதை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அவர் 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்
அங்கு அவர் முதல் கிரகரி மற்றும் ஆனியா கோஃபி பொருளாதாரப் பேராசிரியராகப் பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியரான கீதா கோபிநாத் இவ்வுலகின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர்.
அட்டகாசமான கல்வியறிவும் அறிவார்ந்த தலைமை பண்பும் கொண்டவர் மேலும் பெரிய அளவில் சர்வதேச அனுபவமும் கொண்டவர் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கிறிஸ்ட்டின் லகார்டே பாராட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
